×

வாலிபர் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத உளவுப்பிரிவு காவலர் இடமாற்றம்: உயரதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர்: வாலிபர் கொலையை தடுக்க நடவடிக்கை எடக்காத விவகாரத்தில் தகவல் தராத உளவுப்பிரிவு காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். கோயம்பேடு சக்தி நகரை சேர்ந்த நாராயணன் (23), பால்டெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தனஞ்செயனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 4ம் தேதி, நாராயணன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கோயம்பேட்டில் தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதற்கு பழிக்கு பழியாக, தனஞ்செயன் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து, கடந்த 7ம் தேதி இரவு தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த நாராயணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ரவுடி தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளியை நாராயணன் வெட்டிய போதே, கோயம்பேடு உளவுப்பிரிவு காவலர் கருணாகரன் (41) உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருந்தால், நாராயணன் படுகொலை செய்யப்பட்டதை தடுத்து இருக்கலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, உளவுப்பிரிவு உயரதிகாரிகள் நேற்று முன்தினம் கருணாகரனை வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்தனர். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Not taking action to prevent teen murder Intelligence Guard Relocation: Operation of High Officers
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...