மக்கள் நீதி மய்யம் கோரிக்கை உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்

சென்னை: உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மநீம கோரிக்கை விடுத்துள்ளது. மநீம தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியைச் சேர்ந்த விசைப்படகில் கடந்த 11ம் தேதி 14 மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். 13ம் ேததி நள்ளிரவில் விசைப்படகு மங்களூரிலிருந்து 55 கடல் மைல் தூரத்தில் தெற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த சிங்கப்பூரை சேர்ந்த தனியார் கப்பல் ஒன்று மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

விசைப்படகில் இருந்த மீனவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 7 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். 6 மீனவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட இருவரில் வேல்முருகன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மீதமுள்ள 6 மீனவர்களை காணவில்லை. இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர், தாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>