×

மோரிஸ் மோசம்

ராஜஸ்தான் ₹16.25 கோடிக்கு  ஆல்ரவுண்டர் மோரிசை (தென் ஆப்ரிக்கா) ஏலத்தில் எடுத்தது. கடந்த 4 ஆட்டங்களில் முறையே  2* (4பந்து), 36* (18), 0 (2), 10 (7) ரன் எடுத்துள்ளார். கூடவே 4 ஆட்டங்களிலும் 2, 1, 2, 0 விக்கெட்களை எடுத்துள்ளார். ஓவருக்கு சராசரியாக 10ரன் அள்ளித் தந்துள்ளார். மேலும் 36 ரன் எடுத்த போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்சன், ‘ஏலத்தில் எடுத்த தொகைக்கு  ஏற்ப  மோரிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த தொகைக்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் அடுத்தடுத்த ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தோன்றவில்லை’ என்று குறை கூறியுள்ளார்.

Tags : Morris , Morris is bad
× RELATED ஐபிஎல்லில் ரூ.16.5 கோடிக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் திடீர் ஓய்வு