ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித டிக்கெட் பணம் பெற காலக்கெடு நீட்டிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்காக ஆன்லைனில் குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்வு பெற்ற பக்தர்களுக்கு சேவைக்கான டிக்கெட் வழங்கப்பட்டது. கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட  மார்ச் 20 முதல் ஜூன் 30க்கு இடையில் இந்த  டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள், பணத்தை திரும்ப பெற்று கொள்ளம்படி  கூறப்பட்டது. அல்லது எப்போதாவது ஒரு நாள் விஐபி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. சரியான கால அவகாசம் இல்லாத நிலையில், இதுவரை பல முறை இதன்  காலக்கெடுவை தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.  தற்போது மீண்டும் இதன் காலக்கெடுவை  இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>