மத்திய அரசுக்கு எல்.முருகன் பாராட்டு

சென்னை: 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க முன்வந்துள்ள மத்திய அரசுக்கு எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா 2வது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகிற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாவண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

 இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால், இந்தியா முழுவதும் 80 கோடி பயனாளிகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் இந்த உதவியை மக்கள் பெற முடியும்.  உடனடி நிவாரணமாக இத்தகைய உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கிற கொரோனா பாதுகாப்பு முறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>