ராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்

பெரம்பூர்: காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்  ராகுல்காந்தி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர், பூரண நலம்பெற  வேண்டி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவிக நகர் 3வது சர்க்கிள் தலைவர் என்.எஸ்.பாஸ்கர் தலைமையில்  மாவட்ட தலைவர் டில்லிபாபு முன்னிலையில் இன்று ஓட்டேரியில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் இருந்து ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் உள்ள அம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், 108 பெண்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.

Related Stories:

>