புத்தக வாசிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!: உலக புத்தக தினத்தை முன்னிட்டு அமேசான் கிண்டிலில் சலுகைகள் அறிவிப்பு..சலுகை விலையில் சந்தா; ஆடியோ புத்தகங்கள் இலவசம்..!!

டெல்லி: உலக புத்தக தினத்தை முன்னிட்டு அமேசான் கிண்டிலில் இலவச புத்தகங்கள் உட்பட பல்வேறு சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தக வாசிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆன்லைன் புத்தக வாசிப்பு தளமான அமேசான் கிண்டிலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி உலகின் பல்வேறு மொழிகளை சேர்ந்த குறிப்பிட்ட 10 புத்தகங்களை சந்தாதாரர்கள் இல்லாத அனைவரும் ஆங்கில வடிவில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிதாக இணையக்கூடியவர்களுக்கும், வாடிக்கையாளர்கள் 2 மாதத்திற்கான சந்தாவை 229 ரூபாய் என்ற சலுகை விலையிலும் அமேசான் ஆடுரல் தளத்தில் ஆடியோ புத்தகங்களாக இலவசமாக பயன்படுத்த 30 நாள் டிரைலரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பிரைம் வாடிக்கையாளர்கள் 2 மாதத்திற்கான கிண்டில் அன்-லிமிடெட் சந்தாவை 80 சதவீத சலுகையான 99 ரூபாயில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இலவசமாக நூற்றுக்கணக்கான புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆடியோ புத்தகங்களுக்கான 3 மாத டிரைலும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் ஏப்ரல் 25ம் தேதி நண்பகல் 12.29 மணிக்கு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>