நாட்டில் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி: நாட்டில் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் வாகனங்களை மாநிலங்கள் நிறுத்துவதாக கூறப்படும் நிலையில் ராணுவத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றெல்லாம் மருத்துவமனைகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில் டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனங்கள் பல்வேறு மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றன என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் உடனடியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனையின் போது டெல்லிக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் உயிர்களை காப்பாற்ற வேண்டியது முக்கியம் என்றும் டெல்லிக்கு வரக்கூடிய ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்கள் தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆக்சிஜன் தொழிற்சாலைகளையும் ராணுவத்திடம் ஒப்படைத்து ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ராணுவமே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

தடுப்பூசிகளை விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசுக்கு கிடைக்கும் அதே விலையில் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>