திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் தேருக்கு வர்ணம் தீட்டும் பணி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 5ம் தேதி பந்தக்கால் முகூர்த்த விழா துவக்கப்பட்டது. இக்கோயில் மண்டகபடிதாரர்கள் பூஜைகள் மட்டும் செய்து சுவாமி புறப்பாடு இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (23ம்தேதி) தேரோட்டம் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற இருந்தது.

கொரோனா தடையால் சென்ற ஆண்டைபோல் இந்த ஆண்டும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பிறவி மருந்தீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை இன்று நடத்தப்படும். தேருக்கு சிறப்பு பூஜைகள் இன்று காலை 8.15 மணிக்கு நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர் தூய்மைப்படுத்தப்பட்டு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.

Related Stories:

>