×

தமிழகம் மாளிகை கண்ணாடி மாளிகையில் நிஷகாந்தி மலர் பூத்துள்ளது

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள தமிழகம் மாளிகை கண்ணாடி மாளிகையில் இரவில் மட்டும் ஒரு முறை பூக்கக் கூடிய பிரம்ம கமலம் எனப்படும் நிஷகாந்தி மலர்கள் பூத்துள்ளது. பிரம்ம கமலம் எனப்படும் நிஷகாந்தி பூக்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் வகையை கொண்டது. இரவில் மட்டுமே இந்த மலர்கள் பூக்கும். கள்ளி இனத்தை சேர்ந்த செடியாகும். இது சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும். பொதுவாக இந்த மலர்கள் அனைத்து இடங்களிலும் இருக்காது. மிகவும் அரிதாகவே இந்த மலர்கள் காணப்படும்.

இந்த தாவரம் ெதன் அமெரிக்காவின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாக கொண்டவை. அதேசமயம், தற்போது இந்த செடிகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது. இவ்வகை மலர்கள் இலங்கையில் சொர்க்கத்தின் மலர் என வர்ணிக்கப்படுகிறது. அதேபோல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏசு பிறந்த போது அவரைக்காண வந்த மூன்று அரசர்களக்கு வழிகாட்டியாக இருந்த நட்சத்திரங்களின் குறியீடாக இதனை பார்க்கின்றனர். தமிழகத்திலும் இவ்வகை மலர்கள் அரிதாக காணப்படுகிறது.

பலர் இந்த செடிகளை வீடுகளில் வளர்க்கின்றனர். இந்நிலையில், ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை கண்ணாடி மாளிகையில் இந்த அரிய வகை நிஷகாந்தி செடிகள் அதிகளவு வைக்கப்பட்டள்ளது. இதில், ஒரு செடியில் மட்டும் இரு மலர்கள் சிவப்பு நிறத்தில் பூத்துள்ளன. இதனை பூங்கா ஊழியர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர்.

Tags : TN House Glass House , Nishakanthi flower blooms in the glass house of Tamil Nadu
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...