கொரோனா தொற்றால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் நாளை மறுநாளுக்குள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் 987 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 50,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 726 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>