கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: ஒரே நேரத்தில் மொத்தமாக கூடுவதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஈக்காட்டுதாங்கலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கூட்ட நெரிசலை தவிர்க்க, தீவிர அறிகுறி இருந்தால் மட்டும் முக்கிய 4 அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் அனுகலாம். கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது என்றார்.  மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Related Stories:

>