சென்னை மெரினா கடற்கரையில் இயங்கி வந்த கடைகள் அகற்றம்: வியாபாரிகள் போராட்டம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இயங்கி வந்த கடைகளை முன் அறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருவதாக கூறி கடை உரிமையாளர்கள் காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 1600 கடைகள் இயங்கி வந்தது. இந்த கடையில் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க 1500 கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 1500 பழைய கடைகளை அகற்றிவிட்டு எஸ்எஸ் எனும் உலோகத்தால் ஆன வெறும் 900 கடைகள் நிறுவுவதற்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இந்நிலையில் பழைய கடைகளை அகற்றிவிட்டு புதிய கடைகளை நிறுவுவதற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். குறிப்பாக 900 கடைகளும் இன்று அதிகாலை முதலே மெரினா கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கடைகள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கடைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

1500 கடைகள் இயங்கிவந்த நிலையில் வெறும் 900 கடைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் 60% மட்டுமே இதற்கு முன்பாக கடைகள் நடத்தி வந்த நபர்களுக்கும் மீதமுள்ள 40% வெளியாட்களுக்கும் கொடுக்கப்பட்டதாக இவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories:

>