புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்: கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:உலக புத்தக தினம் ஏப்ரல் 23 உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வரலாற்றின் தொடர்ச்சியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தை பரவலாக்கவும் புத்தக வாசிப்பே நமக்கு பெரிதும் உதவிடும். இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளை போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும். எனவே உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியை தொடர்வோம். உலக புத்தக தினமான இன்று, படைப்பாளிகள், வாசகர்கள் என அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலக புத்தக தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>