×

அனுமதி இல்லாமல் ஆம்னி பஸ்சில் மாற்றம் செய்தால் 6 மாதம் சிறை: போக்குவரத்து துறை எச்சரிக்கை

சென்னை: தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உரிய அனுமதி பெறாமல் ஆம்னி வாகனத்தின் நீளம், அகலம், உயரம், எடை, இருக்கை, படுக்கை அமைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை மற்றும் பல மாற்றங்கள் குறித்தான புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன.எனவே, ஆம்னி பேருந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆம்னி பேருந்துகளை புதிய பதிவு மற்றும் மறு பதிவு செய்த பொழுது, பதிவுச் சான்றில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே வாகனத்தினை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறி மாற்றங்கள் செய்து இயக்கினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது ஒவ்வொரு மாற்றத்திற்கும் ரூ.5 ஆயிரம் அபராதமாகவோ அல்லது சிறை தண்டனை மற்றும் அபராதமும் இணைந்தும் விதிக்கப்படும். மேலும் வாகனம் சிறைபிடிக்கப்படும் எனவும் இதன் மூலம்  எச்சரிக்கப்படுகிறது.

Tags : Omni ,Transport Department , 6 months imprisonment for changing Omni bus without permission: Transport Department warning
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி