கொரோனா தாக்கம் எதிரொலி: ராகுல், மம்தாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தார் பிரதமர் மோடி.!!!

டெல்லி: மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பரப்புரை பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல் 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில்,  6ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 7 மற்றும் 8ம் கட்ட தேர்தல் வரும் 26, 29ம் தேதிகளில் நடக்க உள்ளன. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்கத்தில் தனது பிரசார கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக கடந்த 18-ம் தேதி அறிவித்தார். இதர கட்சி தலைவர்களும்  பிரசாரங்களை ரத்து செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, மம்தாவின் தேர்தல் பிரசாரமும் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து, பாஜக சார்பில் பாஜவும் தனது பிரசார பேரணியை குறைத்துக் கொள்வதாக கடந்த 19ம் தேதி அறிவித்தது. இனி சிறிய அளவிலான கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் என கூறியுள்ள பாஜ, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்கும் கூட்டத்தில் கூட அதிகபட்சம் 500 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என அறிவித்தது.

ஆனால், கொரோனா பரவல் மத்தியில் பாஜகவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது பெரும் விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் 7ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு நாளை பரப்புரை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் நாளை மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவதால் மேற்கு வங்க பிரதமர் மோடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>