இந்தியாவில் தயாராகிறது மேலும் ஒரு தடுப்பூசி : இறுதிக்கட்ட சோதனையில் பயோலொஜிக்கல் -இ தடுப்பூசி!!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி மருந்தை ஐதராபாத்தில் உள்ள பயோலொஜிக்கல் -இ என்ற இந்திய நிறுவனம் உருவாக்கி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள பயோலொஜிக்கல் -இ நிறுவனம் கொரோனா தொற்றை தடுக்கும் புதிய தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே முதல் மற்றும் 2வது ஆய்வக பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அளித்துள்ள பயோலொஜிக்கல் -இ நிறுவனம், விரைவில் இறுதிகட்ட பரிசோதனையை தொடங்க இருக்கிறது. 3வது கட்ட பரிசோதனை முடிவின் விவரங்கள் கிடைத்த உடன் மத்திய அரசு இதனை பயன்படுத்த அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோலொஜிக்கல் -இ உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்ததும் மாதம் சுமார் 7 கோடி தடுப்பூசிகளை தயாரித்து விநியோகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள ஒரு முறை மட்டும் போடக்கூடிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை பயோலொஜிக்கல் -இ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>