டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி: டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் பேசியதாவது: டெல்லியில் கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.

டெல்லி மாநில அரசின் தரவுகோளின்படி, இங்கு ஒரு நாளைக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதை 378 டன்களாக நிர்ணயித்து, தற்போது 480 டன்னாக உயர்த்தியுள்ளது. ஆக்சிஜன் அளவை உயர்த்தியதற்கு நன்றி. எனினும் இது எங்களுக்கு போதாது. டெல்லி மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கக் கோரி வருகிறது. ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் உயிரிழப்பதை கூட ஏற்க முடியாது  இந்த பேரிடர் காலத்தில் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கரம் நீட்ட வேண்டும்.டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்  என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>