×

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் அமர தடை

பவானி:   பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமர்வதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு  உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம்  முதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பவானியின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமான சங்கமேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பூ, பழங்கள்  உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

வழக்கமாக  கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி மற்றும் ஆதிகேசவ பெருமாள் சன்னதி வளாகங்களில் பக்தர்கள் வழிபாடு  முடித்த பின்னர் அமர்ந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, தற்போது கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாடு முடிந்ததும் உடனடியாக கோயிலை விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று இக்கோயிலின் கட்டுப்பாட்டிலுள்ள  பழனியாண்டவர் கோயில், காவிரி வீதியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் பக்தர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது.



Tags : Bhavani Sangameshwarar Temple , Devotees barred from sitting at Bhavani Sangameshwarar Temple
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்