சின்னாளபட்டி அஞ்சுகம் காலனியில் தடுமாற வைக்கும் தரைமட்ட கிணறு: விபத்திற்கு முன் தடுப்பு அமைக்கப்படுமா?

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சுகம் காலனியில் தடுப்புகள் இல்லாத தரைமட்ட கிணறால் விபத்து அபாயம் நிலவுகிறது.சின்னாளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு அஞ்சுகம் காலனி அருகேயுள்ளது கூட்டுறவு நகர். இங்கு தண்ணீர் இல்லாத பாழடைந்த உளளது.  தரைமட்டத்தில் உள்ள இக்கிணற்றுக்கு தடுப்புச்சுவர் ஏதும் இல்லை.

இதனால் இரவுநேரத்தில் வரும் வாகனங்கள் தடுமாறி கிணற்றில் உள்ளே விழும்  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றி புட்செடிகள் அடர்ந்து வளர்ந்திரு–்பபதால் கிணறு இருப்பது தெரியாமல் பொதுமக்கள் தடுமாறி உள்ளே விழும்  அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உயிர் பலி ஏதும் நடக்கும் முன்பு கிணற்றை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்து கொடுக்க  வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: