திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் காணிக்கை 22 லட்ச ரூபாய்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் சுமார் 22 லட்ச ரூபாய் இருந்தது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது  வழக்கம். கடந்த மார்ச் 12ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த மாதத்திற்க்கான உண்டியல்  காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி, அழகர்கோயில் துணை ஆணையர் அனிதா, சரக ஆய்வர் செல்வம், நாகவேல், கர்ணன், மணிமாறன்,புகழேந்தி உள்ளிட்ட அலுவலர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் வேத பாடசாலை  மாணவர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 22லட்சத்து 62ஆயிரத்து  217 ரூபாயும், 120 கிராம் தங்கமும், 1 கிலோ 500 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>