வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை : மத்திய அரசு திட்டவட்டம்!!

மும்பை : வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், படுக்கையில் இருக்கும் நோயாளிகள், இரு சக்கர நாற்காலியில் இருப்போருக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசிப் போட உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டகங்களை  வீடு வீடாக எடுத்துச் செல்வது சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அவற்றில் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் சென்றால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என வாதிட்ட அவர், எனவே வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடியாது என கூறினார். இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

>