சென்னை : கொடைக்கானலில் 6 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் சென்னை திரும்பி திமுக தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர், ‘’இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!நம்மையும் – நாட்டு மக்களையும் பாதுகாப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த மார்ச் 9ம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவிட் வேக்சின் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்காத முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாக தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டு இருந்தது.