போலீசாரை தாக்கிய போதை ஆசாமி கைது

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் நேதாஜி நகரில் குடிபோதையில் கத்தியுடன் ஆசாமி பொதுமக்களை மிரட்டுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ. விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதை ஆசாமியை பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றார். புகாரின்பேரில் பரங்கிமலை மாங்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழைய குற்றவாளி செந்தில்குமாரை(38)கைது செய்தனர். 

Related Stories:

>