திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு சாதிய படுகொலைகள் தமிழகத்தில்தான் அதிகம்

மதுரை: அரக்கோணம் தலித் இரட்டைப்படுகொலை தொடர்பான கருத்தரங்கு மதுரையில் நேற்று நடந்தது. இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது: சட்டமன்ற தேர்தலை அடுத்து அரக்கோணத்தில் இரட்டை கொலை நடத்தப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இது திட்டமிட்ட சாதிய படுகொலை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய படுகொலை அதிகமாக நடக்கிறது. தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும். பாமக சாதிய வன்கொடுமையை கூர்நோக்குவதில் குறியாக இருக்கிறது. விசிக கட்சியை பற்றி தவறாக சித்தரிப்பதும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசுவதும் நீடிக்கிறது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>