கொரோனா உதவி மையத்துக்கு மருத்துவ, ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் கொரோனா உதவி மையத்துக்கு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு எண் 98844 66333 மூலம் உதவி கோரினால், இக்குழுவினர் அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்கி ஒருங்கிணைப்பார்கள். அதன்படி, மருத்துவக்குழு தலைவராக கலீல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டாக்டர்கள் முகம்மது உபயதுல்லா பெய்க், முகம்மது நயிமுதின், நிர்மல் சந்த், ஜெயந்தி, சதீஷ்குமார், கிறிஸ்டோபர் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்புக்குழு தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக லட்சுமிகாந்தன், டாக்டர் அழகு ஜெயபால், செந்தமிழ் அரசு, வரதராஜன், எஸ்.ஏ.வாசு, பினுலால் சிங், ஜி.கே.முரளிதரன், டி.ஏகம்பவாணன்,  கோவை பச்சமுத்து, சுமதி அன்பரசு, சிந்தை சேகர், கடல் தமிழ்வாணன், அகரம் கோபி, பி. சுரேஷ்பாபு, சேகர் விஜய், கல்லிடை அசன் சேக், ஏ.தன்ராஜ், அருண்குமார், அன்பழகன், விக்டர், மனோஜ்குமார், சசிகுமார், வெங்கடேசன், திருத்தணி திருமலை, திருவொற்றியூர் வே. கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>