இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்த வேண்டும்: ஐகோர்ட் அதிரடி

சென்னை: இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவங்களுக்கு அறிவுறுத்தும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துற்க்குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். 2013-ல் பஸ் மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90 சதவிகித ஊனம் ஏற்பட்டதில் கூடுதல் இழப்பீடு கோரிய வழக்கில் நீதிகள் அறிவுறுத்தியுள்ளார்.

விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம். எனவே வேகக் கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளார். எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இறக்குமதியாகும் இருசக்கர வாதங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளார். உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>