இந்தியாவில் இருந்து பிரான்ஸ் செல்லும் பயணிகள் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரான்ஸ் அரசு உத்தரவு

பிரான்ஸ்: இந்தியாவில் இருந்து பிரான்ஸ் செல்ல உள்ள பயணிகள் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரான்ஸ் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அனைத்து  பயணிகளும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. பிரேசில் மற்றும் அனைத்து விமானங்களையும் இந்த வாரம் நிறுத்த பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. ஏப்ரல் 24 முதல், பிரான்சில் வசிக்கும் அல்லது பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டிற்கு பறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 24 முதல், பிரான்சில் வசிக்கும் அல்லது பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டிற்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. பிரான்ஸ் வந்தவுடன் அனைத்து பயணிகளுக்கும் 10 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்த சரியான ஏற்பாடுகளை செய்ததாக விமானத்திற்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என கூறியுள்ளது.

Related Stories:

>