கரூர் வாங்கல் சாலையில் தாழ்வாகவுள்ள நகராட்சி குப்பை கிடங்கு சுற்றுச்சுவர்-காற்றில் குப்பைகள் பறக்கும் அவலம்

*இது உங்க ஏரியா

கரூர் : கரூர் வாங்கல் சாலை பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கின் சுற்றுச்சுவரை உயரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும் குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் இந்த பகுதியில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையின் இடதுபுறம் உள்ள குப்பை கிடங்கின் சுற்றுச்சுவர் தாழ்வாக உள்ளதால், குப்பைகள் காற்றில் பறந்து சாலையின் பல்வேறு இடங்களில் பரவி கிடக்கிறது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் துர்நாற்றம் காரணமாகவும் அவ்வழியாக செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, குப்பை கிடங்கின் சுற்றுச்சுவரை உயரமாக கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் பார்வையிட்டு சுற்றுச் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>