×

இந்திய பக்தர்கள் யாரும் கைலாசாவிற்கு வராதீங்க.... நித்தியானந்தா பகீர் அறிவிப்பு!!

கைலாசா :இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.பாலியல் வல்லுறவு வழக்கில் அகமதாபாத் போலீஸால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, 2019ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடினார். ஆனால் இப்போது வரை அவர் எங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

தலைமறைவான சில நாட்களிலேயே கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாகவும், தனி நாடு அந்தஸ்து கோரி ஐநாவிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறி பகீர் கிளப்பினார். கைலாசா நாட்டிற்கென்று பிரத்யேகமாக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் நித்தி. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், உலகம் முழுவதும் கொரோனா என்னும் உயிர்கொல்லி தொற்று பரவியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நித்யானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி இல்லை.அத்துடன், ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளிலில் இருந்து பக்தர்கள் கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Kailasa ,Nithiyananda Pakir , நித்தியானந்தா
× RELATED கேபா என்னும் பாமா பாபா