×

மோசமான திட்டமிடலே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு காரணம்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என பிரியாங்கா காந்தி விமர்சனம் செய்தார். வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டியளித்தார்.

அப்படி இருக்கும் போது ஏன் தட்டுப்பாடு ஏற்படுகிறது? என கேள்வி எழுப்பினார். உங்களுக்கு முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே 8 முதல் 9 மாதங்கள் இருந்துள்ளது. அந்த இடைவெளியை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என குற்றம் சாட்டினார். இன்று 2,000 லாரிகள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது. ஆனால், அது எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சென்று சேர முடியாத சூழல் உள்ளது மிகவும் துயரமான நிகழ்வாகும் என கூறினார். கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நாம் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறோம் என தெரிவித்தார். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என கூறினார். கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மத்திய அரசு 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Priyanka Gandhi , Worse, corona vaccine, in short supply, Priyanka Gandhi
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களில்...