×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு!

டெல்லி : தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடுமையாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநில அரசுகள், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க தடுமாறி வருகின்றன.இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை உட்புறம், தினசரி, 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகு உள்ளது.இது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின்படி, காப்பர் ஆலையும் மூடப்பட்டுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில், ஆக்சிஜன் தயாரிப்பு அலகை இயக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இயக்கப்படும் பட்சத்தில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்குவோம்.

இது, மாநில அரசுக்கு உதவியாக இருக்கும். மேலும் கொரோனா தொற்றால் நாட்டில் தற்போது நிலவும் ஆக்சிஜன் தேவையை ஈடு செய்யலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதி மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Manu Vedanta ,Sterlite Plant , ஆக்சிஜன்
× RELATED ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால்...