×

மனித உயிர்களே முக்கியம்... ஆக்சிஜனுக்காக நோயாளிகளை காத்திருக்கச் சொல்வீர்களா ?... மத்திய அரசுக்கு நீதிபதிகள் காட்டம்!!

டெல்லி : பேரழிவை நோக்கி செல்லும் சூழலில் ஆக்சிஜனுக்கான நோயாளிகளை காத்திருக்க சொல்வீர்களா என்று மத்திய அரசை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதால் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜனை தடை செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், பொருளாதார நோக்கத்தை விட மனித உயிர்களே முக்கியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசின் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் விநியோக கொள்கையில் சரியான திட்டமிடல் இல்லை என்று நீதிபதிகள் குறை கூறினர்.

பெரிய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுவதால் டெல்லியில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, டெல்லியில் 80% கொரோனா நோயாளிகள் லேசான அறிகுறிகளுடன் இருப்பதாலும் 17% பேர் மிதமான பாதிப்புகள் உடனும் 3% மட்டுமே தீவிர பாதிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லிக்கு 378 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தேவை என்ற நிலையில், அம்மாநில அரசு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்று கோருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. 74,941 நோயாளிகளுக்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்ற நிலையில், 378 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டெல்லிக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு விவாதித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் கங்காதார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைந்துள்ளதை சுட்டிக் காட்டினர். தொழிற்சாலைகளுக்கு 22ம் தேதி முதல் ஆக்சிஜன் விநியோகம் தடை செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. நோயாளிகள் 22ம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்றே நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Federal Government , மத்திய அரசு
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...