வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு குறித்து கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பெட்டி இயந்திரங்களும் தமிழகத்தில் 75 பாதுகாப்பு மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மர்ம நபர்கள், கன்டெய்னர்கள் இரவு நேரங்களில் நடமாட்டம் இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறினர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை, பெண்களுக்கான டாய்லெட் மட்டுமே கொண்டு வரப்பட்டது, கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறினர். தமிழகத்தில் வருகிற மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், குறைந்தபட்சமாக 14 மேஜைகள், அதிகபட்சமாக 30 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் (தேர்தல் அதிகாரிகள்) தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.

Related Stories:

>