கொரோனா மையத்தில் ரெம்டெசிவர் மருந்தை திருடுவது நர்ஸ் காதலி விற்பது காதலன் வேலை: சுடுகாட்டில் விற்றபோது சுற்றிவளைத்த போலீஸ்

நாக்பூர்: கொரோனா மையத்தில் ரெம்ெடசிவர் மருந்தை திருடிய நர்ஸ் மற்றும் சுடுகாட்டில் அதனை விற்ற காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் கெய்க்வாட் பாட்டீல் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கான பராமரிப்பு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் ஜோதி அஜித் என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார். முன்னதாக போபாலில் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு நாக்பூரில் பணியில் சேர்ந்தவராவார். கட்டுமான ஒப்பந்தக்காரரான காதலன் சுபம் சத்யநிவாஸ் என்பவருடன் சேர்ந்து, கொரோனா பராமரிப்பு மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த ரெம்ெடசிவர் மருந்தை திருடி விற்பனை செய்வதாக வதோடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்த போலீசார் காதலன் சுபத்தின் நடவடிக்கையை கண்காணித்தனர். கொரோனா மையத்தில் இருந்து பைக்கில் சென்ற சுபம் சத்யநிவாஸ், வதோடா கல்லறை பகுதிக்கு வருவோர் போவோரிடம் ரெம்டெசிவர் மருந்தை விற்றுக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த போலீசார் சுபம் சத்யநிவாசை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து ஐந்து ரெம்ெடசிவர் மருந்து பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதையடுத்து, போலீசார் சுபம் சத்யநிவாஸ் மற்றும் அவரது காதலி ஜோதி அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கையும் களவுமாக சிக்கிய சுபம் சத்யநிவாசிடம் விசாரித்த போது, தனது காதலியான ஜோதி என்ற நர்சுடன் சேர்ந்து கொரோனா நோயாளிக்கு வழங்கும் ரெம்டெசிவர் மருந்தை பல நாட்களாக திருடி கள்ளச்சந்தையில் விற்றுள்ளனர். காதலி திருடிக் கொண்டு வருவார். காதலன் அதை கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதிப்பார். அதனால், இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 நாட்களில் 40 ெரம்ெடசிவர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் வார்டு ஊழியர்கள், ஒரு செவிலியர், ஒரு மருத்துவர், இரண்டு மருந்து கடை ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்’ என்றனர்.

Related Stories:

>