×

சென்னையில் இன்று மோதல்: டெல்லியை சமாளிக்குமா மும்பை?

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து, மும்பை இண்டியன்ஸ் அணி களமிறங்குகிறது. இரு அணிகளுமே நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தலா 3 போட்டிகளில் ஆடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலுமே இந்த முறை வலுவாக உள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக ஓபனர் ஷிகர் தவான், பேட்டிங்கில் மிரட்டுகிறார். இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 186 ரன்களை குவித்து, நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் உள்ளார்.

அவரை தொடர்ந்து பிரித்வி ஷா, ரிஷப் பன்ட், ஸ்டீவன் ஸமித் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் என பேட்ஸ்மேன்கள் பட்டாளமே உள்ளது. கிறிஸ் வோக்ஸ், ரபாடா, டாம் கரன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என திறமையான பவுலர்களும் உள்ளனர். மற்றொரு புறம் ரோஹித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை அணியின் வீரர்கள், கோப்பையை தக்க வைக்கும் துடிப்புடன் ஆடி வருகின்றனர். ரோஹித் ஷர்மா,

குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, போலார்ட் என தலை சிறந்த பேட்ஸ் மேன்களும், பும்ரா, போல்ட், ராகுல் சஹார், கோல்டர் நைல் மற்றும் ஜேன்சன் என வலுவான பவுலர்களும் அணியில் உள்ளனர். ஆனால் டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறிப்பாக ஷிகர் தவான், ரிஷப் பன்ட், பிரித்வி ஷா ஆகியோரை கட்டுப்படுத்தினால் மட்டுமே இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி கைகூடும்.

Tags : Chennai ,Mumbai ,Delhi , Conflict in Chennai today: Will Mumbai overcome Delhi?
× RELATED எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின்...