×

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தடுப்பூசி மருந்துகள் அதிக அளவில் வீண் :அதிர்ச்சி தகவல்

சென்னை: நாட்டில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் வீணாக்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது/ இதுவரை 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதில் 44 லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் தமிழகம்தான் 12.10% அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி உள்ளது.

ஹரியானா 9.74%;

பஞ்சாப் 8.12%;

மணிப்பூர் 7.8% ;

தெலுங்கானா 7.55% அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி இருக்கின்றன.

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்காத மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் டையூ, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகளில் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Tags : Tamil Nadu , கொரோனா தடுப்பூசி
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...