×

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல : ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை : இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும்!

இவை அனைத்தையும் விட முக்கியமானது மக்களே… விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Ramadas , ராமதாஸ்
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்