தீவிரமடையும் கொரோனா பரவல்!: வரலாற்றில் 2வது முறையாக மூடப்பட்ட பிரசித்திப்பெற்ற உதகை தாவரவியல் பூங்கா.. பார்வையாளர்களின்றி வெறிசோடல்..!!

நீலகிரி: கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில் உள்ள பிரசித்திப்பெற்ற தாவரவியல் பூங்கா வரலாற்றிலேயே 2வது முறையாக மூடப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டதை பொறுத்தவரையில் மிக பிரதான தொழிலாக சுற்றுலாத் தொழில் திகழ்ந்து வருகிறது. ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக மலைகளின் அரசி என்று அழைக்கக்கூடிய உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா 2 அலையானது வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி உதகையில் இன்று காலை முதலே அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பார்வையாளர்கள் இன்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக உதகை தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் மட்டும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.

ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் அதிகாலை முதல் மாலை வரை சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதிக் கொண்டிருப்பர். தற்போது சுற்றுலா பயணிகள் இன்றி உதகையே வெறுமையாக காட்சியளிக்கிறது. தாவரவியல் பூங்காவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இழப்பீடு என்பது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>