×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

சென்னை: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில்களில் முன்பதிவு செய்து தான் பயணிக்க முடியும். கடந்த ஓராண்டு காலமாக முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளே கிடையாது. தற்போது முன்பதிவு செய்வதற்காக பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு பீகார் மாநில கயாவிற்கு சென்ற ரயிலில் 150 க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா செல்லக்கூடிய ரயிலில் முன்பதிவு செய்வதற்காகவும் பலர் வந்துள்ளனர். தட்கல் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காகவும் வந்துள்ளனர். இன்று இரவு 10 மணிக்கு ரப்திசாகர் ரயில் செல்கின்றது. உத்திரப்பிரதேச மாநில கோரக்பூர் வரை செல்வதற்காகவும் பலர் இங்கு காத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், பலர் இங்கு கட்டிடப்பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டை போன்று முழு ஊரடங்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தில் முன்கூட்டியே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதாகவும், முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் இல்லாத காரணத்தால் தங்களது முன்பதிவு டிக்கெட்கள் கிடைப்பதில் தாமதம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதற்காக கடந்த முறை போன்று சிறப்பு ரயில்கள் விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு செல்லக்கூடிய பயணிகளும் ஏராளமானோர் இங்கு காத்துக்கொண்டுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் இருந்தால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரை இரவு நேர ஊரடங்கு மட்டுமே அமல்படுத்தியுள்ளனர். எனவே யாரும் வெளியில் செல்ல வேண்டாம். தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் இதுபோன்று வெளியில் செல்கின்றனர்.

Tags : Chennai Central Railway Station , Northern workers
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...