×

இந்தியாவில் இருந்து யாரும் இங்க வராதீங்க.. இந்தியாவை ரெட் லிஸ்ட் பட்டியலில் சேர்த்து பிரிட்டன் அதிரடி

லண்டன் : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தை கடந்து வருவதால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும் ரெட் லிஸ்ட் பட்டியலில் சேர்ப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. கடினமான இந்த முடிவை வேறு வழியின்றி எடுத்துள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் வரும் 23ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு பயணிகள் செல்ல முடியாது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியா வருவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக முதலில் அவரது பயணத்திற்கான காலம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரெட் லிஸ்ட் அறிவிப்பு முடிவை பிரிட்டன் சுகாதாரத்துறை எடுக்கிறது. அந்த துறைக்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் மோடியும் நானும் முடிவுக்கு வந்துள்ளோம். என்னால் இந்தியாவுக்கு பயணம் செய்ய இயலாது. இந்தியாவில் பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணத்தை தள்ளிவைத்துவிட்டேன்.பிரிட்டன் உட்பட பல நாடுகள் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, என்றார்.


Tags : India , பிரிட்டன் அரசு
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...