டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து 188 பயணிகள் ஒரு விமானத்தில் ஹாங்காங் சென்றனர். ஹாங்காங் சட்ட விதிகளின் படி அனைத்து பயணிகளும் புறப்படும் தேதிக்கு முன்னதாக 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது.

ஆனால் ஹாங்காங் சென்ற பிறகு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 188 மொத்த பயணிகளில் 25 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆகும்.

Related Stories:

>