ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வு

சென்னை: இந்தியாவின் முன்னணி ஜூவல்லரி பிராண்ட்களில் ஒன்றான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி  சுரேஷை, தமது நிறுவனத்தின் விளம்பர தூதுவராக (பிராண்ட் அம்பாஸடர்) அறிவித்துள்ளது. இவர், பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்  நடித்து திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். இன்றைய இளைய தலைமுறையினரிடையே மிகுந்த வரவேற்பையும்,  ஆதரவையும் பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ் புகழினால், ேஜாஸ் ஆலுக்காஸின் பிராண்ட் மேலும் பல புதிய வாடிக்கையாளர்களை சென்றடையும் என்றும்,  வாடிக்கையாளர்களுடனான உறவை பலப்படுத்தும் என்றும் இந்த நிறுவனத்தினர் உறுதியாக நம்புகின்றனர்.

இந்நிறுவனம் இந்த ஆண்டில் விரிவாக்கம் செய்வதற்கான பல திட்டங்களை வகுத்துள்ளது. மேலும் தமது வளர்ச்சியின் அடுத்த நிலையாக  தென்னிந்திய மாநிலங்களில் பல ஷோரூம்களையும் திறக்கவுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸின் புத்தம் புதிய பரம்பரா கலெக்ஷனை கீர்த்தி சுரேஷ்  அறிமுகம் செய்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில், ஜோஸ் ஆலுக்காஸின் மேலாண்மை இயக்குனர்கள் ஜான் ஆலுக்கா, வர்கீஸ் ஆலுக்கா மற்றும்  பால் ஜே.ஆலுக்கா ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: