அதிகாரிகள் அத்துமீறல் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் தொடர் கடையடைப்பு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.  சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், என்.ஜெயபால், ஒய்.எட்வர்ட்,  எஸ்.சாமுவேல் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்பட பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை நிர்வாகிகள்  பங்கேற்றனர்.  

இதில், கொரோனாவை காரணம் காட்டி, முகக்கவசம் அணியாமல் அதிகாரிகள் 10 முதல் 15 பேர் வரை ஒரு வணிக நிறுவனத்திற்குள் புகுந்து, அதிகார  அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். வணிக உரிமையாளர்கள் விதியை மீறியதாக 20 ஆயிரம், 25ஆயிரம் என அபராதம் விதிக்கப்படுகிறது. பணியில்  இருக்கின்ற ஊழியர்களை வெளியேற்றி, அடாவடியாக சாவியை எடுத்துக்கொள்வது, சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல் ஆகும். தொடர்ந்து இதே  நிலை நீடித்தால் வியாபாரிகள்  தொடர் கடையடைப்புப் போராட்டம் நடத்த தயாராக உள்ளனர் என்பதை எச்சரிக்கை செய்கிறோம்.

Related Stories:

>