விதிகளை மீறிய வியாபாரிகளிடம் ரூ.70 ஆயிரம் அபராதம் வசூல்

அண்ணாநகர்: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை சிஎம்டிஏ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை வியாபாரிகள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை கடந்த 17ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, காய்கறி மார்க்கெட்டில் விதிகளை பின்பற்றாத 14 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேற்கண்ட கடைகளின் உரிமையாளர்கள் விதிகளை பின்பற்றுவோம் என அதிகாரிகளிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஒரு கடைக்கு ரூ.5000 வீதம் 14 கடைக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை நேற்று கட்டிய பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.

Related Stories:

>