×

நவால்னி மருத்துவமனையில் அனுமதி

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புடின் அரசை கடுமையாக விமர்சித்து வந்த அலெக்ஸி நவால்னிக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது. இதனால் சுயநினைவை இழந்த அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சிகிச்சை பெற்றார். அவர் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய போது கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வாரங்களாக சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனால் அவர் எந்நேரமும் உயிரிழக்ககூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறையில் இருக்கும் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அரசு பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று உலக நாடுகள் எச்சரித்திருந்தன. இதையடுத்து, அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Navalny Hospital , Admitted to Navalny Hospital
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...