×

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் 188 ரன் குவிப்பு

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இரு அணிகளும் மாற்றம் ஏதுமின்றி களமிறங்கின. சென்னை அணிக்கு கேப்டனாக 200வது போட்டி என்ற சாதனை மைல்கல்லை இந்த போட்டியின் மூலமாக தோனி எட்டினார். ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 10 ரன் எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் துபே வசம் பிடிபட்டார். அதிரடி காட்டிய டு பிளெஸ்ஸி 33 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மோரிஸ் வேகத்தில் பராக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மொயீன் அலி - சுரேஷ் ரெய்னா இணைந்து 3வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தனர். மொயீன் 26 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேற, ரெய்னாவுடன் இணைந்த அம்பாதி ராயுடு சிக்சர்களாகப் பறக்கவிட்டு அசத்தினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தனர். பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராயுடு 27 ரன் (17 பந்து, 3 பவுண்டரி), ரெய்னா 18 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தோனி 17 பந்தில் 18 ரன் எடுத்து சகாரியா பந்துவீச்சில் பட்லரிடம் பிடிபட்டார். அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காத ஜடேஜா 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினா. கடைசி கட்டத்தில் சாம் கரன் (13), ஷர்துல் தாகூர் (1) இருவரும் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.

அந்த அணிக்கு உதிரிகளாக மட்டுமே 14 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. டுவைன் பிராவோ 20 ரன் (8 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தீபக் சாஹர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சேத்தன் சகாரியா 4 ஓவரில் 36 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். மோரிஸ் 2, முஸ்டாபிசுர், திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜோஸ் பட்லர், மனன் வோரா இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Tags : Super ,Kings ,Rajasthan Royals , Super Kings 188 against Rajasthan Royals
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி