மருத்துவமனையில் சகோதரருக்கு இடம் கிடைக்க உதவுங்கள்: மத்திய அமைச்சர் டிவிட்

புதுடெல்லி: முன்னாள் ராணுவ ஜெனரல் விகே.சிங், உபி.யில் உள்ள காஜியாபாத் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் காஜியாபாத்தைச் சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப் பட்ட தனது சகோதரருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்க உதவும்படி, தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த பலர், மத்திய அமைச்சரின் சகோதரருக்கே இந்த நிலையா?என பதிவிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அப்பதிவை நீக்கிய அவர், ``எனது தொகுதியை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்க உதவி கேட்டேன். அவர் என் உறவினர் அல்ல. தொகுதியை சேர்ந்தவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திடவே அதனைப் பகிர்ந்தேன். மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே மருத்துவமனையில் இடம் கிடைக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியருக்கு `டேக்’ செய்ந்திருந்தேன்,’’ என விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>