அரசு பணியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூக  இடைவெளியின் காரணமாக பார்வையற்றோர், தவழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அரசு  ஊழியர்கள் பணிக்கு வருவதில் பல்வேறு கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காலம் முடிவுக்கு வரும் வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு  மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். முதல்வர் அதற்குரிய உரிய உத்தரவுகளை பிறப்பிக்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>