×

இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா ?

டெல்லி : இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய அரசு அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியிடப்பட்ட தகவல் பீதியை அதிகரிக்கச் செய்தது.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதில் வார இறுதி ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பகல் நேரங்களில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதனால் கூட்டத்திற்கு பின்னர் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா அல்லது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Corona ,India ,Modi , பிரதமர் மோடி
× RELATED மக்களுக்கு சாதனைகளை செய்யக்கூடியது...